‘கோப்ரா’ வெளியீடு எப்போது? - இயக்குநர் தகவல்

‘கோப்ரா’ வெளியீடு எப்போது? - இயக்குநர் தகவல்
Updated on
1 min read

‘கோப்ரா’ படத்தை மே இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து தகவல் தெரிவித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தில் இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு, சமீபத்தில்தான் முடிவுற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, இந்தப் படத்துக்குப் பிறகு தொடங்கப்பட்ட படங்கள் எல்லாம் வெளியாகி வருகின்றன. ஆகையால் ‘கோப்ரா’ வெளியீடு எப்போது என்ற கேள்வியை இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் எழுப்பினார்கள். அதற்கு “மே 26-ம் தேதி வெளியிடத் திட்டமிடப்படுகிறது” என்று பதிலளித்துள்ளார் அஜய் ஞானமுத்து.

நீண்ட நாட்கள் கழித்து ‘கோப்ரா’ அப்டேட் வந்திருப்பதால் விக்ரம் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in