Published : 26 Feb 2022 09:23 PM
Last Updated : 26 Feb 2022 09:23 PM
குஜராத்தி மொழியில் ரீமேக் ஆகிறது ‘ஆண்டவன் கட்டளை’. இதனை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஆண்டவன் கட்டளை’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்தப் படம் குஜராத்தி மொழியில் ரீமேக் ஆகிறது.
இந்தப் படத்தின் மூலம் குஜராத்தி சினிமாவிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, முதன்முறையாக இதர மொழியில் படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் மல்ஹர் தக்கர், ரித்திகா சிங் கதாபாத்திரத்தில் மோனல் கஜ்ஜார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இன்று (பிப்ரவரி 26) படபூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை தேசிய விருது வென்ற இயக்குநர் மனீஷ் சைனி இயக்கி வருகிறார். இதற்கு ‘Shubh Yatra’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.
இது தொடர்பான அறிவிப்பினை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT