தெறி விஜய்யின் 3 கெட்டப்: பின்னணி பகிர்கிறார் ஸ்டைலிஸ்ட்

தெறி விஜய்யின் 3 கெட்டப்: பின்னணி பகிர்கிறார் ஸ்டைலிஸ்ட்
Updated on
1 min read

'தெறி' படத்தில் விஜய் மூன்று கெட்டப்களில் அசத்தியுளதாக, படத்தின் ஆடை வடிமைப்பாளர் மற்றும் ஸ்டைலிஸ்ட் கோமல் ஷஹானி கூறியுள்ளார்.

இதற்கு முன் விஜய்யுடன் 'துப்பாக்கி', 'ஜில்லா' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள கோமல், அட்லீ இயக்கத்தில் உருவாகும் 'தெறி' படத்திலும் பணியாற்றியுள்ளார்.

படம் குறித்து மேலும் பேசிய கோமல், "விஜய் சார் எந்த மாதிரியான கெட்டப்புக்குள்ளும் எளிதாக பொருந்தமுடியும். அதை அவர் நேர்த்தியாக செய்வார். தெறி படத்தில் அவர் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார். அனைத்தையும் எளிதாகக் கையாண்டார். அதேசமயம் நான் விரும்பிய மாறுதல்களை செய்ய முழு சுதந்திரமும் தந்தார்.

விஜய் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் நான் ஒரு வடிவம் தந்துள்ளேன். எதையும் அவர் மாற்றச் சொல்லி கேட்கவில்லை ஏனென்றால் பெரும்பாலும் நான் தேர்ந்தெடுப்பவை அவருக்குப் பிடித்திருந்தது. புதிதாக ஒரு ட்ரெண்டை பரிசோதித்துப் பார்க்கவும் அவர் ஆவலாக இருந்தார். அவரது கூலிங்கிளாஸ் புது ட்ரெண்டை உருவாக்கும்.

அனைத்து கூலிங்கிளாஸுகளும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ரேபான், ஃபெராரி உள்ளிட்ட பிராண்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தியுள்ளோம். பல இடங்களுக்குப் பயணப்பட்டேன். லாஸ் ஏஞ்சல்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஷாப்பிங் செய்து ஒவ்வொரு கெட்டப்புக்கும் தேவையானவற்றைச் சேகரித்தேன்.

ராங்கு பாடலைத் தவிர மற்ற அனைத்துப் பாடல்களுக்கு விஜய்க்கான ஸ்டைலிங்கை நான் கவனித்தேன். படத்தில் விஜய் அணிந்த சட்டை மேலுறைகள் அனைத்தும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

டோல்சே கப்பானா, அர்மானி, ஜி ஸ்டார், டீஸல் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்தியுள்ளோம். தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகர்களும் பேஷனில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.

நடிகர்கள் மட்டுமல்ல, இப்போது இயக்குநர்களும் தங்களது நடிகர்கள் திரையில் நன்றாக தெரிய வேண்டும் என நினைக்கின்றனர். அட்லீ 'தெறி' படத்தில் எனக்கு ஆதரவாக இருந்தார். புது விஷயங்களைப் பரிசோதிக்க தயாராக இருந்தார்". இவ்வாறு கோமல் பேசியுள்ளார்.

விஜய், சமந்தா, ஏமி ஜாக்ஸன் நடிப்பில் உருவாகியுள்ள 'தெறி' ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in