

சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் உருவாகும் படம் ‘யசோதா’. இதை சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் தயாரிக்கிறார். ஹரி - ஹரிஷ் இயக்குகின்றனர். வரலட்சுமி சரத்குமார்,உன்னி முகுந்தன் உட்பட பலர் நடிக்கின்றனர். ‘‘படத்தின் கதை நட்சத்திர ஓட்டல் பின்னணியில் நடக்கிறது. இதுபோன்ற ஓட்டல்களில் 35-40 நாள் படப்பிடிப்பு நடத்துவது சிரமம். அதனால், கலை இயக்குநர் அசோக் மேற்பார்வையில் ஹைதராபாத் ராமாநாயுடு ஸ்டுடியோவில் ரூ.3 கோடியில் பிரம்மாண்ட செட் அமைத்துள்ளோம்’’ என்கிறார் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத்.