

தயாரிப்பாளர் ‘பைவ் ஸ்டார்’ கதிரேசன் தயாரித்து, இயக்கும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஒருகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து முடிந்திருக்கிறது. அங்கு ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்ட சண்டைக் காட்சியை 10 நாட்கள் படமாக்கி உள்ளனர். ராகவா லாரன்ஸ், சரத்குமார் மற்றும் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்ற இந்த சண்டைக் காட்சியை ‘ஸ்டன்’ சிவா அமைத்திருக்கிறார். இதோடு 85 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது என்கிறது படக்குழு.