

டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகியுள்ளார்.
தற்போது பிரத்யேகமாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் 'பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டு வருகின்றனர். 24/7 ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வனிதா, ஜுலி, தாமரை, பாலாஜி முருகதாஸ், நிரூப், உள்ளிட்ட பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியையும் வழக்கம்போல கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் விக்ரம் படத்துக்கான் பணிகளையும், பிக் பாஸ் நிகழ்ச்சி பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியவில்லை என்றும், இதனால் பல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பணிகள் தாமதமாவதாகவும் கமல் தெரிவிவுத்துள்ளார்.
மேலும் இன்றைய (பிப்.20) எபிசோடுக்குப் பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். இது தற்காலிக இடைவெளிதான் என்றும், மீண்டும் அடுத்த சீசனில் ரசிகர்களை சந்திப்பதாகவும் அந்த அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.