24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகள் - இணையத்தில் சாதனை படைக்கும் ‘அரபிக் குத்து’ 

24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகள் - இணையத்தில் சாதனை படைக்கும் ‘அரபிக் குத்து’ 
Updated on
1 min read

‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரபிக் குத்து’ பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரபிக் குத்து’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ‘அரபிக் குத்து’ பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியான 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை மொத்தம் 30 மில்லியன் பார்வைகளை பெற்று ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது. இப்பாடலுக்கு இதுவரை 20 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.

இப்பாடல் இதற்கு முந்தைய பாடல்களின் யூடியூப் சாதனையை முறியடிக்கும் வகையில் வெளியான ஐந்தே நிமிடங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அரபிக் குத்து பாடல் வீடியோ > இங்கே

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in