அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ 

அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ 
Updated on
1 min read

அமீர் இயக்கும் புதிய படத்துக்கு ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

‘மவுனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். இந்த மூன்று படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றன. இப்படத்துக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவியை வைத்து ‘ஆதி பகவன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்துக்குப் பிறகு அமீர் எந்தப் படமும் இயக்காமல் இருந்து வந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் அவரது ‘ராஜன்’ கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கவுள்ள ஒரு புதிய படத்துக்கு வெற்றிமாறன் - தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். அமீர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார். இதனை அமீர் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இப்படத்தில் ஆர்யாவின் சகோதரர் சத்யா, சூரி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்துக்கான டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்துக்கு ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட தகவல்களை விரைவில் படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in