

‘லத்தி’ படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது
அறிமுக இயக்குநர் ஏ.வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘லத்தி’ என்ற படத்தில் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். இது விஷால் நடிக்கும் 32-வது படமாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது. இதில் விஷாலுக்கு நாயகியாக சுனைனா நடிக்கிறார். பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'லத்தி' படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், இசையமைப்பாளராக சாம் சி.எஸ். பணிபுரிகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 55 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நடிகர் விஷாலுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விஷால் சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளார். தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள படப்பிடிப்பு விஷால் சிகிச்சை முடிந்து திரும்பியதும் மீண்டும் தொடங்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.