அஜித் கூறிய அறிவுரைகள் பெரும் உத்வேகம் -  'எஃப்.ஐ.ஆர்' இயக்குநர் பகிர்வு

அஜித் கூறிய அறிவுரைகள் பெரும் உத்வேகம் -  'எஃப்.ஐ.ஆர்' இயக்குநர் பகிர்வு
Updated on
1 min read

அஜித் கூறிய அறிவுரைகள் தனக்கு பெரும் உத்வேகமாக இருப்பதாக 'எஃப்.ஐ.ஆர்' இயக்குநர் மனு ஆனந்த் கூறியுள்ளார்.

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் 'எஃப்.ஐ.ஆர்'. இதில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். திரையரங்குகளில் நாளை (பிப்ரவரி 11) வெளியாகும் இந்தப் படத்தினை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இயக்குநர் கவுதம் மேனனுடன் 8 ஆண்டுகள் அசோசியேட்டாக பணிபுரிந்திருக்கிறேன். அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்திலும் பணிபுரிந்துள்ளேன். அவருடன் பணியாற்றியது ஒரு மிகப்பெரிய அனுபவம், அவர் கூறிய பல அறிவுரைகள் தான் என்னுடைய இந்த பயணத்தில் பெரும் உத்வேகமாக இருக்கின்றன. ஒரு மனிதராகவும், நடிகராகவும், அவர் மீது எனக்கு பெரும் மரியாதை இருக்கிறது. அவருடன் பணிபுரிந்தது எனக்கு ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட தருணம் என்று நினைக்கிறேன்.

2015ஆம் ஆண்டு தீவிரவாதம் பற்றிய ஒரு கதையை எழுதினேன். ஆனால் அது படமாக மாறவில்லை. அதன் பின்னர் 2018 அந்த கதையில் சில திருத்தங்கள் செய்து அதை ‘எஃப்ஐஆர்’ கதையாக மாற்றினேன். இக்கதையை விஷ்ணு விஷாலிடம் நான் சொல்லும்போது, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அவரே இப்படத்தை தயாரிக்கவும் முடிவு செய்தார்.

இப்படத்தில் உங்களுக்கு ஒரு சின்ன ரோல் இருக்கிறது என்று நான் கவுதம் மேனனுக்கு மேசேஜ் அனுப்பினேன். அவர் உடனடியாக ‘எப்போது படப்பிடிப்புக்கு வரவேண்டும்’ என்று சொல் என்று ரிப்ளை செய்தார். என்மேல அவர் வைத்திருந்த நம்பிக்கையும், எனக்கு அவர் கொடுக்கும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய விஷயங்கள்.

இவ்வாறு மனு ஆனந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in