

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘மகான்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மகான்'. லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. 'மகான்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் ஆகியோர் பணிபுரிந்துளனர்.
இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் பிப்.10ஆம் தேதியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகையரின் கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக படக்குழு அறிமுகம் செய்து வந்தது.
இந்நிலையில் 'மகான்' படத்தின் டீசர் இன்று (ஜன 31) வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே #MahaanOnPrime என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டகி வருகிறது. பலரும் டீசரைப் பார்த்து விட்டு விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.