பாதி நாள் சம்பளம் போதும்: கே.எஸ்.ரவிக்குமார் பதிலால் ‘ரெமோ’ படக்குழுவினர் நெகிழ்ச்சி

பாதி நாள் சம்பளம் போதும்: கே.எஸ்.ரவிக்குமார் பதிலால் ‘ரெமோ’ படக்குழுவினர் நெகிழ்ச்சி
Updated on
1 min read

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24 AM ஸ்டூடியோ நிறுவனம் மூலம் ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அவருக்கு தினமும் சம்பளம் என்ற முறையில் சம்பளம் அளிக்கப்பட்டு வந்தது.

இறுதியாக நடைபெற்ற படப்பிடிப்பில் ஒரு நாள் கே.எஸ்.ரவிக்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அவர் கிளம்பும் போது ஒரு நாளுக்கான சம்பளம் அளிக்கப்பட்டது. ஆனால், அதில் பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார் கே.எஸ்.ரவிக்குமார்.

மூன்று மணி நேரம் மட்டுமே எனது காட்சிகளை படமாக்கினீர்கள். ஆகையால் பாதி நாள் சம்பளம் போதும் என்று மீதமுள்ள தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமாரின் இச்செயலால் சந்தோஷம் கலந்த அதிர்ச்சியில் இருந்திருக்கிறது படக்குழு.

கே.எஸ்.ரவிக்குமாரின் செயல் குறித்து தயாரிப்பாளர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,

"(“I salute KS.Ravikumar sir for professionalism,ethics&humanity.You are an inspiration for all.Thank you for being part of @24AMSTUDIOS #REMO”) என்று தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு தயாரிப்பாளர்களுக்கு சொன்ன தேதியில், சொன்ன பொருட்செலவில் படத்தை முடித்துக் கொடுத்து பெயர் வாங்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். அவருக்கு தெரியாதா ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in