‘எந்திரன்’ வழக்கில் 5 ஆண்டு கழித்து மனு: சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

‘எந்திரன்’ வழக்கில் 5 ஆண்டு கழித்து மனு: சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
Updated on
1 min read

சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஆரூர் தமிழ்நாடன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2010-ல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை என்னு டையது. அந்த கதை கடந்த 1996-ல் ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் ‘இனிய உதயம்’ என்ற வார இதழில் வெளி வந்துள்ளது. என் கதையைத் திருடி எந்திரன் படத்தை இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட் டுள்ளது. எனவே காப்புரிமை சட்டத்தின் கீழ் கலாநிதிமாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரி யிருந்தார்.

இந்த வழக்கில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் கடந்த 2015 செப்டம்பர் 29-ம் தேதி ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக 5 ஆண்டுகள் கழித்து ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் சன் பிக்சர்ஸ் தாக்கல் செய்தது. அதில், ‘‘சன் பிக்சர்ஸ் என்பது தனியார் லிமிடெட் நிறுவனம் கிடையாது. சன் டிவி நெட் வொர்க்கின் ஒரு அங்கம்தான் சன் பிக்சர்ஸ். ஆரூர் நாடன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் எங்க ளுக்கு 2010 டிசம்பர் 20-ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டு, 2011 பிப்ரவரி 19-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அலுவலக மாற்றம் காரணமாக அந்த நோட்டீஸ் எங்களுக்கு 2015-ல்தான் கிடைத்தது. அதனாலேயே இந்த மனுவை தாமதமாக தாக்கல் செய்கிறோம்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரித் தார். ‘‘தாமதமாக மனுவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. இவ்வளவு தாமதத்துக்குப் பிறகு அனுப்பப் படும் ஒரு மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கும் என்று எப்படி நினைத்தார்கள். எனவே, சன் பிக் சர்ஸ் நிறுவனம் இந்த காலதாம தத்துக்கு அபராதமாக ரூ.25 ஆயிரத்தை மானாமதுரையில் உள்ள தொழுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in