

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் 'கத்தி சண்டை' படத்தின் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'மருது' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் நாயகனாக நடித்து படத்தையும் தயாரிக்க இருக்கிறார் விஷால். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்துடன், சுராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால். இப்படத்தை நந்தகோபால் தயாரிக்க இருக்கிறார். வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, சம்பத் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது இப்படத்தின் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்தின் படிப்பிடிப்பு மே 2ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது.