சில உண்மைகள்... சில பொய்கள்... - வதந்திகள் குறித்த நிதி அகர்வால் பார்வை

சில உண்மைகள்... சில பொய்கள்... - வதந்திகள் குறித்த நிதி அகர்வால் பார்வை
Updated on
1 min read

தன்னைப் பற்றிய வதந்திகள் குறித்து நடிகை நிதி அகர்வால் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நிதி அகர்வால். இந்தியில் வெளியான ‘முன்னா மைக்கேல்’ படம் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’, ஜெயம் ரவியுடன் ‘பூமி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சமீபகாலமாக நடிகர் சிம்புவுடன் நிதி அகர்வால் காதலில் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால், இது குறித்து இருவருமே இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நிதி அகர்வால் நடித்துள்ள ‘ஹீரோ’ தெலுங்குப் படத்துக்கான விளம்பரப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறன்றன. இப்படம் தொடர்பான ஒரு பேட்டியில் தன்னை பற்றிய வதந்திகளுக்கு நிதி அகர்வால் விளக்கமளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "நம்மைப் பற்றி எப்போதும் ஏதாவது எழுதப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதில் சில விஷயங்கள் உண்மையாக இருக்கலாம், சில உண்மைக்கு மாறானவையும் இருக்கலாம். எது உண்மை, எது உண்மை இல்லை என்பது நம் பெற்றோருக்கு தெரிவது மட்டும்தான் முக்கியம். மக்கள் பேசுபவை எல்லாம் வெறும் ஹைஸ்கூல் டிராமா போன்றவைதான். இறுதியாக நம்முடைய வேலைதான் அவர்களுக்கு பதில் சொல்லவேண்டும். அப்படி நடப்பதற்காக நான் காத்திருக்கிறேன்" என்று நிதி அகர்வால் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in