'நாய் சேகர்' படக்குழுவில் இணைந்த சிவா

'நாய் சேகர்' படக்குழுவில் இணைந்த சிவா
Updated on
1 min read

'நாய் சேகர்' படக்குழுவில் நடிகர் சிவா இணைந்துள்ளார்.

கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'நாய் சேகர்'. இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் லேப்ரடார் வகை நாய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படத்தின் கதை நாயகனுக்கு நாயின் குணாதிசயங்களும், நாய்க்கு மனிதனின் குணாதிசயங்களும் வருவது போன்று அமைக்கப்பட்டுள்ளது டீஸரைப் பார்க்கும்போது தெரிகிறது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள அந்த நாய்க்கு நடிகர் சிவா குரல் கொடுத்துள்ளார். இதனைப் படக்குழுவினர் சமூக வலைதளங்களில் உறுதி செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in