காதலும் கடந்து போகும் 3 நாட்களில் ரூ.8 கோடி வசூல்

காதலும் கடந்து போகும் 3 நாட்களில் ரூ.8 கோடி வசூல்
Updated on
1 min read

விஜய் சேதுபதி படங்களில் முதல் 3 நாட்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது 'காதலும் கடந்து போகும்'

நலன் குமரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'காதலும் கடந்து போகும்'. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை அபி & அபி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

'காதலும் கடந்து போகும்' படத்துக்கு விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெளியான முதல் 3 நாட்களில் ரூ.8.1 கோடி வசூல் செய்திருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்களில் முதல் 3 நாட்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்திருக்கிறது இப்படம். அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் சுமார் 60 லட்ச ரூபாய் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு இப்படத்துக்கு வரிச்சலுகை அளித்திருக்கும் நேரத்தில் படமும் நல்ல வசூல் செய்து வருவதால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in