மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்த ஆண்டு: சிம்பு புத்தாண்டு வாழ்த்து

மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்த ஆண்டு: சிம்பு புத்தாண்டு வாழ்த்து
Updated on
1 min read

நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று நடிகர் சிலம்பரசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையில் எல்லையைத் தொட்டு மீண்டிருப்பர். இழப்பையும் நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம். இறைவனின் பெருங்கருணையால் இந்தப் புதிய வருடத்தைக் காணவிருக்கிறோம்,

தனிப்பட்ட முறையில் ‘மாநாடு' படத்தை மிகப்பெரிய வெற்றியாகப் பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு. மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021ஆம் ஆண்டை முடிக்கிறேன். 2022ஆம் ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டிக் கொள்கிறேன்.

என்னை எப்போதும் உங்களில் ஒருவனாகப் பார்த்துக் கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், என்றென்றும் எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடகப் பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நலமே வாழ்க. நீங்கள் இல்லாமல் நான் இல்லை'' என்று சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in