19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: கர்ணன், தேன் உள்ளிட்ட 11 படங்கள் தேர்வு

19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: கர்ணன், தேன் உள்ளிட்ட 11 படங்கள் தேர்வு
Updated on
1 min read

சென்னை: 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘கர்ணன்’, ‘தேன்’, ‘கட்டில்’, ‘உடன்பிறப்பே’, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உட்பட 11 தமிழ்ப் படங்கள் திரையிடப்படவுள்ளன.

19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா இம்மாதம் 30-ம் தேதி தொடங்கி ஜனவரி 6-ம் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்’ நடத்தும் இந்தத் திரைப்பட விழாவை பிவிஆர் இணைந்து வழங்குகிறது. 53 உலக நாடுகளிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் வெளியான 121 படங்கள் திரையிடப்படுகின்றன.

அண்ணா சாலைக்கு அருகில் உள்ள பி.வி.ஆர். மல்டி ஃபிளக்ஸில் (முன்பு சத்யம் சினிமாஸ்) நான்கு திரையரங்குகள் (சத்யம், சீசன்ஸ், செரீன், சிக்ஸ் டிகிரீஸ்), அண்ணா திரையரங்கம் ஆகிய ஐந்து திரைகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.

இதில் 11 தமிழ்ப் படங்கள் திரையிடப்படவுள்ளன. அவற்றின் பட்டியல்:

கர்ணன்
உடன்பிறப்பே
தேன்
கட்டில்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்
ஐந்து உணர்வுகள்
மாறா
பூமிகா
சேத்துமான்
கயமை கடக்க

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in