Published : 20 Dec 2021 01:22 PM
Last Updated : 20 Dec 2021 01:22 PM

சிம்புவுக்கு ஜோடியாகும் ஷங்கரின் மகள்?

சிம்பு நடிக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோகுல் இயக்கத்தில் சிலம்பரசன் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘கொரோனா குமார்’. இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படக்குழுவால் வெளியிடப்பட்ட ‘சிஎஸ்கே சிங்கங்களா’ பாடல் இணையத்தில் வைரலானது. இப்பாடலை சிம்பு பாடியிருந்தார். தற்போது இப்படத்தின் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிடவுள்ளது.

முத்தையா இயக்கத்தில் உருவாகும் 'விருமன்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இந்தப் படத்தின் நாயகனாக கார்த்தி நடிக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'விருமன்' படப்பிடிப்பு தேனி உள்ளிட்ட பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இளநிலை மருத்துவம் படித்துவந்த அதிதி ஷங்கர் சமீபத்தில் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x