

'இம்சை அரசன் 23ம் புலிகேசி' இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, மோனிகா, தேஜஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. சபேஷ் - முரளி இசையமைத்த இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். 2006ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் '2.0' படத்தை இயக்கி வரும் ஷங்கர், அந்நிறுவனத்துடன் இணைந்து இரண்டாம் பாகத்தை தயாரிக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வடிவேலு நடிக்க சிம்புதேவனே இயக்க இருக்கிறார்.
இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.