

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாறன்’ பட பின்னணி இசைப் பணிகளை ஜி.வி.பிரகாஷ் தொடங்கியுள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாறன்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதுவரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
'மாறன்' படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்று தயாரிப்புத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் சமீபகாலமாக வெளியாகி வந்தன. பொங்கல் வெளியீடாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப் பெரும் தொகைக்குப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் படக்குழு தரப்பில் வெளியாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் பின்னணி இசைப் பணிகளை ஜி.வி.பிரகாஷ் இன்று தொடங்கியுள்ளார். இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதில், '' ‘மாறன்’ பின்னணி இசைக்கான பணிகள் இன்று தொடங்குகின்றன'' என்று ஜி.வி. குறிப்பிட்டுள்ளார்.