சூர்யா படத்தில் இணைந்த அனிருத் , ஜி.வி.பிரகாஷ்?

சூர்யா படத்தில் இணைந்த அனிருத் , ஜி.வி.பிரகாஷ்?
Updated on
1 min read

சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் அனிருத் , ஜி.வி.பிரகாஷ் தலா ஒரு பாடல் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதியன்று வெளியாகிறது. தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்துக்காக அனிருத் ஒரு பாடலும், ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலும் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in