'நாய் சேகர்' படத்துக்காக சிவகார்த்திகேயன் எழுதும் பாடல் 

'நாய் சேகர்' படத்துக்காக சிவகார்த்திகேயன் எழுதும் பாடல் 
Updated on
1 min read

சதீஷ் நடிக்கும் 'நாய் சேகர்' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதுகிறார்.

கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'நாய் சேகர்'. இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் அனிருத் இசையமைக்கிறார். அப்பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதுகிறார். இதனை ‘நாய் சேகர்’ படக்குழு தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே ‘கோலமாவு கோகிலா’, ‘நம்மவீட்டுப் பிள்ளை’ ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களில் பாடல்களை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in