வில்லனுக்கு ‘தனுஷ்கோடி’ எனப் பெயர் வைத்தது ஏன்? - வெங்கட் பிரபு சுவாரஸ்ய பதில்

வில்லனுக்கு ‘தனுஷ்கோடி’ எனப் பெயர் வைத்தது ஏன்? - வெங்கட் பிரபு சுவாரஸ்ய பதில்
Updated on
1 min read

‘மாநாடு’ படத்தில் ‘தனுஷ்கோடி’ என்று பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் வில்லனான எஸ்.ஜே.சூர்யாவுக்கு ‘தனுஷ்கோடி’ என்று பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

''ஒரு வலிமையான பெயர் வேண்டும் என்பதால் அந்தப் பெயரைத் தேர்வு செய்தோம். ரஜினி - கமல், அஜித் - விஜய் வரிசையில் சிம்பு என்றாலே தனுஷ் பெயர்தான் நினைவுக்கு வரும். எனவே அந்தப் பெயர் வைத்தாலே இயல்பாகவே ஒரு பவர் வந்துவிடும். அடிப்படையில் அவர்கள் இருவருமே நண்பர்கள்தான். இதற்காக கண்டிப்பாக தனுஷே போன் செய்து சந்தோஷப்படுவார்''.

இவ்வாறு வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in