

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் பிரதமர் மோடியின் அறிவிப்பை நடிகர் கார்த்தி வரவேற்றுள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று (நவ.19) காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறன்றனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி, பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
''மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்துகொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்''.
இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.