தமிழ்த் திரையுலகுக்குப் பேரிழப்பு: ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்

தமிழ்த் திரையுலகுக்குப் பேரிழப்பு: ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்
Updated on
1 min read

மறைந்த நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான ஆர்.என்.ஆர்.மனோகர் நேற்று (நவ.17) மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய முகநூல் பக்கத்தில் விஜயகாந்த் கூறியுள்ளதாவது:

''பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர், எழுத்தாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஆர்.என்.ஆர் மனோகர் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

நான் நடித்த 'தென்னவன்' உள்ளிட்ட பல படங்களில் எழுத்தாளராகவும், துணை இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 'தென்னவன்' படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக்குடன் ஆர்.என்.ஆர் மனோகர் நடித்த நகைச்சுவைக் காட்சி அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அவர் பணியாற்றும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பழகுவதற்கு இனிமையானவரும், நல்ல நண்பருமான ஆர்.என்.ஆர்.மனோகரின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்''.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in