அல்லு அர்ஜூன் - லிங்குசாமி படப்பிடிப்பு மே மாதம் தொடக்கம்

அல்லு அர்ஜூன் - லிங்குசாமி படப்பிடிப்பு மே மாதம் தொடக்கம்
Updated on
1 min read

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருந்த 'சண்டக்கோழி 2' படம் கைவிடப்பட்டது. 'சண்டக்கோழி 2' கைவிடப்பட்டதால் லிங்குசாமி அடுத்ததாக யாரை இயக்கவிருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது.

அவர் 'பையா' படத்தின் இந்தி ரீமேக்கை வித்யூத் ஜாம்வாலை வைத்து இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. தற்போது அப்படத்துக்கு முன்னர் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படமொன்றை இயக்கவிருக்கிறார் லிங்குசாமி.

இதில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் துவங்குகிறது. தமிழில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமும், தெலுங்கில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் தயாரிக்க இருக்கின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in