நாகமாக அபர்நிதி

‘மாயப் புத்தகம்’ - அபர்நிதி
‘மாயப் புத்தகம்’ - அபர்நிதி
Updated on
1 min read

‘தேன்’, ‘ஜெயில்’ ஆகிய படங்களில் நடித்துக் கவர்ந்துள்ள அபர்நிதி, தற்போது கதாநாயகியாக நடித்துவரும் படம் ‘மாயப் புத்தகம்’. இதில் கதாநாயகியை சுற்றித்தான் கதை நகர்கிறது. படம் பற்றிக் கேட்டதும், ‘‘தென்னிந்தியா முழுவதும் நாட்டார் வழிபாட்டில் புனிதமான ஒன்றாக இருக்கிறது நாகம். ஒரு நாக ஆத்மாவின் பல ஜென்மப் பயணமே இப்படம். இந்நேரம் நான் என்னமாதிரியான கதாபாத்திரம் ஏற்றுள்ளேன் என்று ஊகித்திருப்பீர்கள். ஆனால், ஊகங்களை தாண்டிய ஆச்சரியமான கதை இதில் இருக்கிறது. என்னுடன் அசோக், ஸ்ரீகாந்த் நாயகர்களாக நடிக்கின்றனர். ராமஜெயபிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார். ‘நீயா?’ படத்துக்குப் பிறகு ‘மாயப் புத்தகம்’ அனைவரது மனதிலும் இடம்பிடிக்கும்’’ என்கிறார் அபர்நிதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in