நல்ல படைப்புகளை வழங்க உற்சாகம் கிடைத்துள்ளது: விசாரணை விருதுகளுக்கு தனுஷ் மகிழ்ச்சி

நல்ல படைப்புகளை வழங்க உற்சாகம் கிடைத்துள்ளது: விசாரணை விருதுகளுக்கு தனுஷ் மகிழ்ச்சி
Updated on
1 min read

'விசாரணை' படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்திருப்பதால் 3 மடங்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தயாரிப்பாளர் தனுஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.

63வது தேசிய விருதுகள் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. சிறந்த தமிழ் படம், சிறந்த உறுதுணை நடிகர் மற்றும் சிறந்த எடிட்டிங் என 3 விருதுகள் வென்றது 'விசாரணை' திரைப்படம்.

3 தேசிய விருதுகள் வென்றிருப்பது குறித்து தயாரிப்பாளர் தனுஷ், "சில படைப்புகளை துவங்கும்போது நமக்கே தெரியும் , இப்படைப்பு மிக முக்கிய இடத்தை பெறும் என்பது. அதை போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற ’விசாரணை’.

நான் 'விசாரணை ' திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள சமுத்திரகனி மற்றும் படத்தொகுப்பாளர் கிஷோருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ’விசாரணை’ படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும் , மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும்.

இதை போன்ற படைப்புகளை தமிழ் மக்கள் நிச்சயம் ஏற்றுகொள்வார்கள் என்ற விஷயம் எனக்கு மகிழ்ச்சியையும் , மேலும் இதை போன்ற படைப்பை வழங்க உற்சாகத்தையும் தருகின்றது" என்று தனுஷ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in