

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - ரஜினிகாந்த் சந்திப்பு டெல்லில் நடைபெற்றது.
67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினி தாதா சாகேப் பால்கே விருது பெற்றிருப்பதை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விருது வாங்கிவிட்டு குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.
அப்போது தாதா சாகேப் பால்கே விருது வென்றிருப்பதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார். குடியரசுத் தலைவர் - ரஜினிகாந்த் சந்திப்பு புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.