எதுவும் அஜித்தைத் தடுக்க முடியாது: போனி கபூர்

எதுவும் அஜித்தைத் தடுக்க முடியாது: போனி கபூர்
Updated on
1 min read

எதுவும் அஜித்தைத் தடுக்க முடியாது என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டார் போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் இதே கூட்டணி இணைந்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீஸர் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மீண்டும் அஜித் - போனி கபூர் - ஹெச்.வினோத் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.

மூன்று படங்கள் தொடர்ச்சியாக ஒரே தயாரிப்பாளருக்கு அஜித் நடித்துக் கொடுப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் அஜித் - போனி கபூர் இருவருக்கும் இடையேயான நட்பு வலுப்பெற்றுள்ளது. மேலும், படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தொடர்ச்சியாக பைக்கில் நீண்ட தூரம் பயணிக்கும் பழக்கத்தை வழக்கமாகியுள்ளார் அஜித்.

சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை வரை பைக்கிலேயே பயணித்துள்ளார் அஜித். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. தற்போது அஜித் பயணித்த புதிய புகைப்படங்களை வெளியிட்டுத் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியிருப்பதாவது:

"தனது கனவில் வாழ்வதிலிருந்தும், தனது ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றுவதிலிருந்தும் எதுவும் அவரைத் தடுக்க முடியாது. அஜித் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறார்".

இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in