விஜய் ஆண்டனி  - பாலாஜி குமார் இணையும் கொலை

விஜய் ஆண்டனி  - பாலாஜி குமார் இணையும் கொலை
Updated on
1 min read

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படத்துக்கு 'கொலை' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

'கோடியில் ஒருவன்' படத்துக்குப் பிறகு 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', பாலாஜி குமார் இயக்கி வரும் படம், விஜய் மில்டன் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. இதில் சில படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இன்று (அக்டோபர் 15) விஜயதசமியை முன்னிட்டு பாலாஜி குமார் இயக்கி வரும் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'கொலை' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இன்ஃபினிட்டி பிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் ஃப்ராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இதில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in