ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் கில்லித்தனமாகப் பணிபுரிகிறார்கள்: பிரபு புகழாரம்

ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் கில்லித்தனமாகப் பணிபுரிகிறார்கள்: பிரபு புகழாரம்
Updated on
1 min read

தமிழக அரசு கில்லித்தனமாகப் பணிபுரிவதாக பிரபு புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னையில் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பிரபு பேசியதாவது:

"அண்ணன் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அனைவருமே கில்லித்தனமாகப் பணிபுரிகிறார்கள். கில்லியாக என்றால் அனைத்தையுமே முன்னின்று செய்யக்கூடியவர்கள் என்று அர்த்தம். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதவியில் இருக்கும்போதும் சரி, இல்லாதபோதும் சரி, உடம்பை ரொம்பவே ஃபிட்டாக வைத்திருப்பார். அவருடைய உழைப்பு ரொம்ப அருமையானது.

நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிக்கூடம் திறக்க இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைவருமே கில்லித்தனமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கரோனா மூன்றாம் அலையை எதிர்க்க இந்த அரசு ரொம்ப பிரமாதமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறது. அனைவருமே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

உலக அளவில் உள்ள அனைத்து மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்".

இவ்வாறு பிரபு பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in