சந்தானத்தின் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' ஃபர்ஸ்ட் லுக்  வெளியீடு

சந்தானத்தின் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' ஃபர்ஸ்ட் லுக்  வெளியீடு
Updated on
1 min read

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன், ஸ்ருதி ஷர்மா, ஸ்ரீதா ராஜகோபாலன், ராம்தத், விஸ்வநாத் உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'. பல்வேறு முன்னணித் திரையுலக பிரபலங்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், இதன் தமிழ் ரீமேக் தொடங்கப்பட்டது. இதனை மனோஜ் பீடா இயக்க சந்தானம் நாயகனாக நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இன்று (அக்டோபர் 15) விஜயதசமியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் சந்தானத்துடன் ஊர்வசி, விஜய் டிவி புகழ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in