ஸ்ரீகாந்த் மறைவு: ரஜினி, கமல் இரங்கல்

ஸ்ரீகாந்த் மறைவு: ரஜினி, கமல் இரங்கல்
Updated on
1 min read

நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று (அக்டோபர் 12) காலமானார். அவருக்கு வயது 82. 1965-ம் ஆண்டு ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'மேஜர் சந்திரகாந்த்', 'எதிர் நீச்சல்', 'பாமா விஜயம்', 'தங்கப்பதக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். ரஜினி நாயகனாக நடித்த முதல் படமான 'பைரவி'யில் வில்லனாக நடித்தவர் ஸ்ரீகாந்த் என்பது நினைவுகூரத்தக்கது.

சென்னையில் வசித்து வந்த ஸ்ரீகாந்த் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று மீண்ட நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் மறைவுக்கு ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், "என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீகாந்த் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் மறைவுக்கு கமல் தனது ட்விட்டர் பதிவில், "கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்கள் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த், தீவிரமான இலக்கிய வாசகராகவும் ஜெயகாந்தனின் ஆப்த சிநேகிதராகவும் இருந்தார். இன்று தன் இயக்கங்களை நிறுத்திக்கொண்டார். இதய கனத்தோடு வழியனுப்பிவைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in