வெற்றிமாறன் இயக்கத்தில் கவுதம் மேனன்

வெற்றிமாறன் இயக்கத்தில் கவுதம் மேனன்

Published on

'விடுதலை' படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் கவுதம் மேனன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விடுதலை'. இதனை எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக இளையராஜா, சண்டைக் காட்சிகளின் இயக்குநராக பீட்டர் ஹெய்ன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது படப்பிடிப்பு. இதில் முக்கியமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கவுதம் மேனன். பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், வெற்றிமாறன் இயக்கத்தில் கவுதம் மேனன் நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இன்னும் இரண்டு வாரங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 'விடுதலை' வெளியாகும் எனத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' படத்தில் இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதனை தாணு தயாரிக்கவுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in