ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல்

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல்
Updated on
1 min read

விமல் நடிக்கும் புதிய படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்குகிறார்.

ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய பேய்ப் படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். வி.பழனிவேல் தயாரிக்கும் இப்படத்தில் தம்பி ராமைய்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று (09.10.21) நடைபெற்றது.
இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து ஏ. வெங்கடேஷ் கூறியுள்ளதாவது:

நான் இயக்கும் முதல் பேய் படம் இது. முற்றிலும் மாறுபட்ட இதுவரை யாரும் பார்த்திராத ஒரு வித்தியாசமான திகில் படமாக இது இருக்கும். தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இது வழக்கமான பேய் படம் அல்ல. பயமுறுத்தும் காட்சிகள் இருந்தாலும் நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொடுத்து ஜனரஞ்சகமான படமாக இதை உருவாக்கி வருகிறேன்.

விஜய் சத்யா நடிப்பில் நான் இயக்கிய ‘ரஜினி’ படப்பிடிப்பிற்கு ஒருநாள் தயாரிப்பாளரை பார்க்க விமல் வந்தார் அப்போது நான் இந்த படத்தின் ஒன்லைனை சொன்னவுடன் அங்கேயே தங்கி முழு கதையையும் கேட்டார். உடனடியாக கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது. உடனே படப்பிடிப்பை துவங்கிவிடலாம் என்று சொல்லிவிட்டார். நாங்களும் உடனே அதற்கான வேலைகளை துவங்கி விட்டோம். மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுளோம்.

இவ்வாறு ஏ. வெங்கடேஷ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in