மீண்டும் இணையும் ஆர்யா - பசுபதி கூட்டணி

மீண்டும் இணையும் ஆர்யா - பசுபதி கூட்டணி
Updated on
1 min read

ஆர்யா நடிக்கவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் பசுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இதில் ஆர்யா - பசுபதி இருவருடைய காட்சிகளை முன்வைத்துப் பல்வேறு மீம்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது. 'நெற்றிக்கண்' படத்தைத் தொடர்ந்து, ஆர்யா நடிக்கவுள்ள வெப் சீரிஸ் ஒன்றை மிலந்த் ராவ் இயக்கவுள்ளார். இது அமேசான் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ஷாமிக் தாஸ்குப்தாவின் 'தி வில்லேஜ்' கிராபிக்ஸ் நாவலை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதில் ஆர்யா, பசுபதி ஆகியோருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வெப் சீரிஸின் ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன் பணிபுரியவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in