Published : 27 Sep 2021 11:12 AM
Last Updated : 27 Sep 2021 11:12 AM
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வா டீல்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
ரத்தினசிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வா டீல்'. 2012-ம் ஆண்டிலிருந்து இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு ரத்தினசிவா இயக்கிய 'றெக்க' மற்றும் 'சீறு' ஆகிய படங்கள் வெளியாகிவிட்டன.
'வா டீல்' படத்தின் மீதான பைனான்ஸ் சிக்கலால் வெளியாகாமல் உள்ளது. மேலும், பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. தற்போது தீபாவளி வெளியீடு என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஹேம்நாத் மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஜே.எஸ்.கே நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Really happy things are progressing and our hardwork & efforts are going to come to limelight....
— ArunVijay (@arunvijayno1) September 26, 2021
I assure you'll #VaaDeal will be an wholesome entertainer!!
Produced by late Dr.N.S.Mohan.@JSKfilmcorp @KarthikaNair9 @actorsathish @dealshiva @MusicThaman @DoneChannel1 pic.twitter.com/akVkzGWC0b
Sign up to receive our newsletter in your inbox every day!