அந்த அமைதியைத் தகர்த்தெறியுங்கள்: ஜோதிகா

அந்த அமைதியைத் தகர்த்தெறியுங்கள்: ஜோதிகா
Updated on
1 min read

அந்த அமைதியைத் தகர்த்தெறியுங்கள் என்று ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ராயபுரத்தில் உள்ள 9 வயது சிறுமி, 48 வயது உறவினர் தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தாயிடம் சொல்லியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் உறவினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இந்தச் செய்தி வெளியானதிலிருந்து பலரும் 'பொன்மகள் வந்தாள்' படக்குழுவினரைப் பாராட்டி வந்தார்கள்.

இந்தச் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஜோதிகா கூறியிருப்பதாவது:

"அந்த அமைதியைத் தகர்த்தெறியுங்கள்.. ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக எழுந்து நிற்கும்போது, அவள் தன்னையறியாமல் அனைத்து பெண்களுக்காகவும் நிற்கிறாள்"

இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in