கரோனாவினால் திரையரங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது: சத்யஜோதி தியாகராஜன்

கரோனாவினால் திரையரங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது: சத்யஜோதி தியாகராஜன்
Updated on
1 min read

கரோனாவினால் திரையரங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவகுமாரின் சபதம்'. இதில் ஹிப் ஹாப் ஆதி, பிராங்க்ஸ்டர் ராகுல், விஜய் கார்த்திக், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் சத்யஜோதி தியாகராஜன் பேசியதாவது:

"கோவிட் நம் வாழ்க்கையை மாற்றிவிட்டது. 'பட்டாஸ்' படத்திற்கு பிறகு இப்போது மீண்டும் உங்கள் அனைவரையும் பார்ப்பது மகிழ்ச்சி. ஹிப் ஹாப் ஆதி படங்களை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ‘நட்பே துணை’ படத்தைப் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் துணை கதாப்பத்திரங்களுக்கு கூட நிறைய வரவேற்பு கிடைத்தது.

'சிவகுமாரின் சபதம்' படத்தின் கதையை எனது மகன் தான் முழுதாக கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் முழுதாக முடிந்த பிறகு பார்த்தேன். இரண்டாம் பகுதி என்னை மிகவும் பாதித்தது ஆதியை மனமார பாராட்டினேன்.

‘மூன்றாம் பிறை’ படத்திற்குப் பிறகு இந்தப்படம் தான் என்னை அதிகம் பாதித்தது. இந்த படத்தில் தாத்தாவாக வரும் குமணன் அட்டகாசமாகச் செய்துள்ளார். நெகட்டிவாக வரும் விஜய் கார்த்திக் மிக அழகாகச் செய்துள்ளார். நடிகர் கதிரின் காமெடி நன்றாக வந்துள்ளது.

அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவை, கொடுத்த பட்ஜெட்டில் அற்புதமாகச் செய்துள்ளார். ஆதி படத்தில் வரும் நாயகிகள் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள் அது போல் மாதுரி ஜெயின் பெரிய அளவில் வெற்றி பெறுவார்.

கரோனாவினால் திரையரங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல படங்கள் தியேட்டரில் பார்த்தால் தான், நாம் அதை ரசிக்க முடியும். அதனால் தான் காத்திருந்து இப்படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம். உங்கள் முழு ஆதரவைத் தாருங்கள்"

இவ்வாறு சத்யஜோதி தியாகராஜன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in