சர்வானந்த் நடிப்பில் உருவாகும் கணம்

சர்வானந்த் நடிப்பில் உருவாகும் கணம்
Updated on
1 min read

சர்வானந்த் நடிப்பில் உருவாகும் படத்துக்கு 'கணம்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் சர்வானந்த், ரீத்து வர்மா, அமலா அக்கினேனி, நாசர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்க புதிய படம் தொடங்கப்பட்டது. இதனை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டது. நீண்ட நாட்கள் கழித்து இதில் அமலா அக்கினேனி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'ஒக்கே ஒக்க ஜீவிதம்' என்று தெலுங்கில் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு. தமிழுக்குப் பெயர் வைக்காமலே இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு.

தற்போது தமிழுக்கு 'கணம்' எனப் பெயரிட்டுள்ளனர். டைம் டிராவலை வைத்து ஒரு கமர்ஷியல் படத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. விரைவில் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.

சேரன் இயக்கத்தில் வெளியான 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்துக்குப் பிறகு சர்வானந்த் நடிப்பில் வெளியாகும் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in