பிப்ரவரி 26-ல் வெளியாகிறது போக்கிரி ராஜா

பிப்ரவரி 26-ல் வெளியாகிறது போக்கிரி ராஜா
Updated on
1 min read

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் 'போக்கிரி ராஜா' திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி இருக்கும் படம் 'போக்கிரி ராஜா'. ஜீவாவுடன் நாயகியாக ஹன்சிகா, வில்லனாக சிபிராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.டி.செல்வக்குமார் தயாரித்திருக்கிறார். ஜீவா நடிப்பில் வெளியாகும் 25வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், காதலர் தினத்தன்று இப்படத்தின் இசையையும், பிப்ரவரி 26ம் தேதி படத்தையும் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

'போக்கிரி ராஜா' படத்தைத் தொடர்ந்து தயாரிப்பில் இருக்கும் 'திருநாள்' படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது டி.கே இயக்கத்தில் 'கவலை வேண்டாம்' படத்தில் நடித்து வருகிறார் ஜீவா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in