மிர்ச்சி சிவா நடிக்கும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' தொடக்கம்
மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது.
லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. சென்னையில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி.என். இயக்குகிறார்.
இதில் நாயகனாக மிர்ச்சி சிவாவும், நாயகியாக மேகா ஆகாஷும் நடிக்கவுள்ளனர். மேலும், அஞ்சு குரியன், பாடகர் மனோ, மாகாபா ஆனந்த், ஷா ரா, நான் கடவுள் ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய். பாலா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்தர் ஏ.வில்சன், இசையமைப்பாளராக லியோன் ஜேம்ஸ், கலை இயக்குநராக துரைராஜ், எடிட்டராக பூபதி செல்வராஜ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். ஃபேன்டசி காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாகிறது.
