'பார்டர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

'பார்டர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்டர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'குற்றம் 23' படத்துக்குப் பின் அருண் விஜய் - அறிவழகன் மீண்டும் இணைந்து பணிபுரிந்துள்ள படம் 'பார்டர்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இடையே, ஓடிடி வெளியீட்டுக்காகப் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால் முடிவை மாற்றியது. நவம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டாலும், தேதி வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது நவம்பர் 19-ம் தேதி 'பார்டர்' வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தீபாவளி முடிந்து, 2 வாரங்கள் கழித்து வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை பிரபு திலக் கைப்பற்றியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in