கொண்டாடிய நயன்தாரா: நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்

கொண்டாடிய நயன்தாரா: நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்
Updated on
1 min read

தனது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடிய நயன்தாராவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

தமிழ்த் திரையுலகில் இருக்கும் காதல் ஜோடிகளில் முக்கியமானது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி தான். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.

இன்று (செப்டம்பர் 18) விக்னேஷ் சிவனின் பிறந்த நாளாகும். இருவருமே ஒருவருடைய பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடும் பழக்கமுடையவர்கள். நயன்தாரா எந்தவொரு சமூக ஊடகத்திலும் இல்லை என்பதால், அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவார் விக்னேஷ் சிவன்.

இந்த ஆண்டும் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளார் நயன்தாரா. இதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது:

"இன்ப அதிர்ச்சியான பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கும், என் வாழ்வில் நீ இருப்பதன் மூலம் எனக்குத் தந்திருக்கும் ஈடில்லாத பரிசுக்கும் நன்றி தங்கமே. எப்போதும் என் மீது காட்டும் அன்புக்கும் தரும் ஆசீர்வாதங்களுக்கும் அனைத்து அன்பார்ந்த நண்பர்களுக்கும் நன்றி"

இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in