'டாக்டர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

'டாக்டர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

முதலில் இந்தப் படம் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தியது. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன், திரையரங்க வெளியீட்டுக்கு மாற்றப்பட்டது. சரியான வெளியீட்டுத் தேதிக்காகப் படக்குழு காத்திருந்தது.

தற்போது அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் 'டாக்டர்' வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in