புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக ‘தேன்’ தேர்வு

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக ‘தேன்’ தேர்வு
Updated on
1 min read

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கு இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்' என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக்கழகம் மத்திய அரசின் திரைப்பட இயக்குநரகத்துடன் இணைந்து புதுச்சேரியில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடத்தி வருகிறது.

அதுபோல் இந்தாண்டுக்கான திரைப்பட விழா புதுச்சேரியில் வருகின்ற 24-ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட 'தேன்' திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகத்துக்கு ரூ.1 லட்சமும், சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் விருதும் முதல்வர் ரங்கசாமி வழங்க உள்ளார். சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட தேன் திரைப்படம் மலைக்கிராம மக்களின் வாழ்வியல், அவர்களின் பிரச்சினைகளை, துயரங்களை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in