சசிகுமாரின் 'ராஜவம்சம்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சசிகுமாரின் 'ராஜவம்சம்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'ராஜவம்சம்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'ராஜவம்சம்', 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'எம்.ஜி.ஆர் மகன்', 'நா நா', 'பகைவனுக்கு அருள்வாய்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சசிகுமார். இதில் சில படங்களின் பணிகளை முழுமையாக முடித்தும் கொடுத்துவிட்டார்.

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு இருப்பதால், சசிகுமார் நடிப்பில் தயாராக இருக்கும் படங்கள் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. முதலாவதாக 'ராஜவம்சம்' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை கதிர்வேலு இயக்கியுள்ளார். இதில் சசிகுமார், நிக்கி கல்ரானி, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ் , மனோபாலா, சிங்கம் புலி, யோகி பாபு, 'கும்கி' அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணிமேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர் .

ஒளிப்பதிவாளராக சித்தார்த், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in